
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலே இறைச்சி கடைகளில் கூட்டம் குவிய துவங்கியது. தீபாவளியன்று பிற்பகலில் தான் அமாவாசை திதி துவங்குவதால், வழக்கத்தை விட இம்முறை ஆடு விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளியன்று மக்கள் அதிக அளவில் ஆட்டுக்கறி வாங்கி அசைவ விருந்து தயார் செய்வது வழக்கம். வெடிகள், மத்தாப்புடன் தொடங்கும் தீபாவளி பண்டிகை ஆட்டுக்கறியுடன் முடிவடைந்தால் தான் மக்களுக்கு தீபாவளி கொண்டாடிய திருப்தியே வரும். அதனால் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் அதிகாலையிலேயே வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆண்டு சந்தைகளில் மொத்தம் 21 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. ஒரு ஆடு 4 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையிலும் ஆடுகள் அமோகமாக விற்பனையானது. புதுவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, செங்கல்பட்டு, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
வாரச்சந்தையில் ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இந்த சந்தையில் சுமார் ரூ.6 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!
வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!
மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!
திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!