சத்தமில்லாமல் உயரும் சமையல் எரிவாயு விலை!- சமாளிக்குமா சாமானிய குடும்பங்கள்?

சமையல் எரிவாயு
சமையல் எரிவாயு

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சத்தமில்லாமல் உயரும் தொடர் விலையேற்றம், சாமானியர்களின் தலையில் இடி விழுவதாக அமைந்திருக்கிறது.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையைத் தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், சமையல் எரிவாயு விலையை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. 1015 என்ற அளவில் முதல் முறையாக சமையல் எரிவாயு ஆயிரத்தைக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 3 ரூபாயும், வணிக பயன்பாட்டு எரிவாயு விலை 8 ரூபாயும் சென்னையில் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வணிக எரிவாயு விலை 250 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதற்கு முன் மார்ச் மாதம் வணிக எரிவாயு விலை 105 ரூபாய் உயர்த்தப்பட்டது. மே தொடக்க வாரத்தில் 102 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது 8 ரூபாய் அதிகரித்துள்ளது. உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் காரணமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எரிபொருள் விலையை உயர்த்தாமல் ஒரே நிலையில் வைத்திருந்தனர். தேர்தல் முடிந்ததும் அனைத்து வகையான எரிபொருட்களின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in