கிலோ 500 ரூபாய்... உச்சம் தொட்டது பூண்டு விலை; இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

பூண்டு விலை உயர்வு
பூண்டு விலை உயர்வு

சென்னையில் ஒரு கிலோ பூண்டின் விலை 500 ரூபாயை தொட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தக்காளி, வெங்காயம், பூண்டு
தக்காளி, வெங்காயம், பூண்டு

சைவமோ, அசைவமோ இரண்டு வகை சமையலுக்கும் அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்றால் பூண்டு, வெங்காயம், தக்காளி இவற்றைச் சொல்லலாம். அதே நேரம் இவை மூன்றும் எப்போது வேண்டுமானாலும் விலை ஏறி பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்க கூடியவையாக இருக்கின்றன.

கடந்த ஆண்டு ஒரு சில இடங்களில் பெய்த கனமழை காரணமாகவும், ஒரு சில இடங்களில் ஏற்பட்ட வறட்சி காரணமாகவும், தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. தக்காளி பயிரிட்டு கோடீஸ்வரர் ஆனவர்கள், தக்காளி வயலில் சிசிடிவி கேமரா, தக்காளி வயலுக்குக் காவல் போட்டது என விலையேற்றம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பூண்டு
பூண்டு

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பூண்டின் விலை அதிகரித்துள்ளது. அதிலும் இன்று ஒரு கிலோ பூண்டின் விலை 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரத்துக் குறைவால் கடந்த சில நாட்களாக 400 முதல் 450 ரூபாய்க்கு விற்பனையான பூண்டு விலை இன்று ஒரே நாளில் 50 ரூபாய் உயர்ந்து 500 ரூபாயை எட்டியுள்ளது.

மேலும் இஞ்சி 105 ரூபாய், ஊட்டி கேரட் 80 ரூபாய், அவரைக்காய் முப்பது ரூபாய், பச்சை மிளகாய் 30, தக்காளி 30 ரூபாய், சின்ன வெங்காயம் 30 ரூபாய், பீன்ஸ் 30 ரூபாய், ஊட்டி பீட்ரூட் 50 ரூபாய், வெங்காயம் கிலோ 20 ரூபாய், முள்ளங்கி இருபது ரூபாய் மற்றும் வெண்டைக்காய் 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in