விடுதலை வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்: முதல்வர் மரியாதை

விடுதலை வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்: முதல்வர் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பல நூற்றுக்கணக்கான தியாக உள்ளங்களாலேயே நம் நாடு சுதந்திரம் எனும் சுடரை அடைந்தது. அவர்களில் விடுதலைக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை நிகழ்த்தியவர் தீரன் சின்னமலை. தமிழகத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களில் ஒருவரான தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாள் தமிழக அரசின் சார்பில் இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலையின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராஜகண்ணப்பன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஓபிஎஸ் மரியாதை

அதிமுக சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செய்தார். இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் உள்பட பலரும் கலந்துகொண்டனர். அதேபோல் பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகளின் சார்பிலும் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in