‘அந்தம்மா திரும்பத் திரும்பப் பேசுறாங்க’!: வடிவேலுவுடன் சசிகலாவை ஒப்பிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

‘அந்தம்மா திரும்பத் திரும்பப் பேசுறாங்க’!: வடிவேலுவுடன் சசிகலாவை ஒப்பிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் ‘ திரும்ப திரும்ப பேசுற நீ’ என்பதை போல் சசிகலா, அதிமுக தன்னுடையது என திரும்ப திரும்பக் கூறி வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் இன்று கையெழுத்திட்டார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜனநாயக கடமை ஆற்றிய என் திமுக மீது பொய் வழக்குகள் போட்டுள்ளது, நீதிமன்ற உத்தரவை மதித்து தொடர்ந்து கையெழுத்திட்டு வருகிறேன். என்னை அந்தமானில் கையெழுத்து போடச் சொன்னாலும் போடத் தயாராக இருக்கின்றேன்" என்றார்.

மேலும், " திருக்கோயில் சொத்துக்கள் தொலைந்து போகிறது என்று சொன்ன மதுரை ஆதீனம் கருத்தை உதாசீனப்படுத்தி விட முடியாது. நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் ‘ திரும்ப திரும்ப பேசுற நீ’ என்பதை போல் சசிகலா, அதிமுக தன்னுடையது என திரும்ப திரும்பக் கூறி வருகிறார். அனைத்து நீதிமன்றங்களிலும் அதிமுக யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக தெளிவாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி நாங்கள் தான் உண்மையான அதிமுக. எனவே, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலில் சசிகலா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். சசிகலா ஒரு தீய சக்தி. எந்த காலத்தில் சசிகலாவை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்பதே எங்களின் நிலைபாடு. சசிகலாவை பாஜகவில் சேர்ப்பதால் தானே படு குழியில் விழ வேண்டிய நிலைக்கு பாஜக செல்ல நேரிடும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in