டி.முகர்ஜி மறைவு: தமிழகக் காவல் துறையின் டிஜிபியாக இருந்தவர்!

டி.முகர்ஜி மறைவு: தமிழகக் காவல் துறையின் டிஜிபியாக இருந்தவர்!

தமிழகத்தின் முன்னாள் டிஜிபி டி.முகர்ஜி (75), உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவு காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகக் காவல் துறையில் 2006 முதல் 2007 வரை டிஜிபி-யாகப் பதவிவகித்தவர் டி.முகர்ஜி. பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு சென்னை ராமாபுரம் அருகே உள்ள மணப்பாக்கத்தில் வசித்து வந்த முகர்ஜி, அண்மைக்காலமாகவே வயோதிகத்திற்கே உரிய உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

அவரது மறைவுச் செய்தி தமிழகக் காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in