
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் ஊழல் காரணமாக 100 பேருக்கும் மேல் பணிபுரிந்து வந்த தனது ஐடி நிறுவனத்தை மூடி தற்போது வீடின்றி பிளாட்பாரத்துக்கு வந்துவிட்டதாக தொழிலதிபர் ஒருவர் வேதனையுடன் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நவமணி என்ற அந்த நபர், இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். "2016ல் அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த மிக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்து வந்த எங்கள் நிறுவனம் மூடப்பட்டது.
2019ல் உயர்நீதிமன்றம் சென்று முறையிட்டேன். நீதிபதி என்னை இரண்டு பெட்டிஷன் பதிவு செய்ய சொன்னார். மிக மோசமான நிதி நிலவரம் காரணமாகவும், கொரோனா காரணமாகவும் திரும்ப செல்ல இயலவில்லை.
எங்கள் மென்பொருளால் அகில இந்தியாவுக்கே பெருமை சேர்த்தோம். டிஜிட்டல் இந்தியா பாராட்டினார்கள். 2019ல் பிரதமருக்கு இந்த ஊழல் குறித்து மனு அனுப்பினேன். அதுவும் டெல்லியில் இருந்து அண்ணாநகர் K4 காவல்நிலையம் வந்தது. என்னை கண்டுபிடிக்க முடியவில்லை என மனுவை திருப்பி அனுப்பினார்கள்.
2021ல் முதலமைச்சர் தனிப்பிரிவில் இது சம்பந்தமாக மனு கொடுத்தேன். பப்ளிக் சீக்ரெட் பிரிவுக்கு அனுப்புகிறோம், இதற்கு நம்பர் தரமாட்டோம் என்றார்கள். 50க்கும் மேற்பட்ட தடவைகள் அங்கு சென்றேன். ஆறு மாதங்களுக்கு முன் திடீரென ஒருநாள் எஸ்பிசிஐடி காவல்துறை அதிகாரிகள் வீடு தேடி வந்தார்கள்.
சில நாட்கள் விசாரணை நடத்தினார்கள். நாங்கள் ரிப்போர்ட் அனுப்பிவிட்டோம், சில நாட்களில் உங்களுக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரும் என்று சொன்னார்கள். இன்றுவரை எந்த அழைப்பும் வரவில்லை. சென்ற வாரம் கூட முதல்வர் தனிப்பிரிவு தலைமை அதிகாரியை சந்தித்தேன். ஒரு நல்ல அதிகாரி, எப்பொழுதும் அமர சொல்லி ஒரு அரைமணி நேரமாவது பேசுவார். தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். அவரும் என்னுடைய மனு முதல்வருக்கு கொண்டு செல்ல வாய்ப்பு இல்லை என சொல்லிவிட்டார்.
நீங்கள் எப்படியாவது முதலமைச்சர் செல்லும் வழியில் மறித்து மனுவை அவரிடம் நேரடியாக கொடுங்கள் என்றார்கள். நானும் என் மகளும் முயற்சித்தோம். எங்கு சென்றாலும் காவல்துறை அதிகாரிகள் எங்களை எளிதாக கண்டுபிடித்து தடைசெய்து விடுகிறார்கள். அதிலும் படு தோல்வியே. யாரும் வேலை கொடுக்க தயங்குகிறார்கள்.
தொழில் செய்ய முதலீடு இல்லை. ஓட்டுநர் உரிமம் பெற பணம், கார் இல்லை. The HC filing section is horrible. நீதிபதிகளுக்கு தெரியவேண்டிய உண்மை.
கடுமையான கடன் பிரச்சினைகள், உடல்நலம் குன்றிய மனைவி, மகளுக்கு மருத்துவம் செய்ய பணம் இல்லை, வீட்டு வாடகை கொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்ட சூழ்நிலை, இன்னும் பல பிரச்சினைகள், இருந்தாலும் இன்று வரை சமாளித்து வந்தேன். ஆனால் இப்பொழுது வீதிக்கு தள்ளப்பட்டுள்ளேன். நான் நன்கு வாழ்ந்த அதே சென்னை அண்ணாநகரில் இப்பொழுது டவர் பார்க் அருகில் நடைபாதையில் வாழுகிறேன்.
ஆனாலும் Fight for Justice அண்ட் Never Give Up என்ற முறையில் நான் இதை ஒரு பெருமையாகவே கருதுகிறேன். இதை வாசிக்கும் நீங்கள் எனக்கு மூன்று விதத்தில் உதவலாம். ஒன்று, நான் இன்னும் நம் முதல்வர் மேல் நம்பிக்கையாக இருக்கிறேன். நீங்கள் அவருடைய கவனத்திற்கு கொண்டுசெல்ல உதவலாம். இரண்டு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் யாராவது ஒருவர் கவனத்திற்கு கொண்டு வரலாம். மூன்று, நீங்கள் நேரில் வந்து எனக்கு ஒரு புத்தகம் வாங்கித் தரலாம். சமூகநீதி உங்கள் ஆதரவுக்கு நன்றி" என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!
ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!
அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!
சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!