கொடைக்கானல் மலைப்பாதையில் பயங்கர காட்டுத் தீ... விடிய விடிய பற்றி எரிவதால் பரபரப்பு!

மலைப்பாதையில் பற்றி எறியும் காட்டுத்தீ
மலைப்பாதையில் பற்றி எறியும் காட்டுத்தீ

கொடைக்கானல் மலைப்பகுதியில் திடீரென பற்றிய காட்டுத் தீயால் ஏராளமான மரங்கள் அழிந்து வருகிறது. இத்தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறை திணறி வருகிறது.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெப்பம் காரணமாக  வனப்பகுதி, வருவாய்த்துறை நிலங்கள், தனியார் தோட்டங்களில் உள்ள செடி, கொடிகள் காய்ந்து கிடக்கின்றன. அதனால் அதில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பல இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிவதும், அணைவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானல்   வத்தலக்குண்டு மலைப் பாதையில் புலிச்சோலை என்ற இடத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள  வருவாய் நிலங்களில் நேற்று இரவு திடீரென காட்டுத்தீ பற்றியது.  காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதனால் வனப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் அங்கிருந்து இடம் பெயர்ந்தன. 

காட்டுத்தீ
காட்டுத்தீ

தீ மளமளவென எரிவதால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.  இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் வனத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் காரணமாக தீ பல இடங்களுக்கும் வேகமாக பரவி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறினர்.

இன்று மேலும் அதிக வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியை தீவிரப்படுத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த கடும் வெப்பத்திலிருந்து வனம் தீ பிடிக்காமல் காப்பாற்றப்பட வேண்டுமானால் இயற்கை ஒத்துழைக்க வேண்டும். நல்ல மழை பெய்து குளிரான தட்பவெட்பம் நிலவினால் தான் வனம் தீப்பற்றுவதில் இருந்து தப்பும் என்பதால் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று மன ஆர்வலர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in