கொடிய விஷம், 15 அடி நீளம்... ஆளுயரத்திற்கு படமெடுத்து நின்ற அரிய வகை ராஜநாகம்; தெறித்து ஓடிய மக்கள்

15 அடி நீள ராஜநாகத்தை பிடித்த வனப்பணியாளர்கள்
15 அடி நீள ராஜநாகத்தை பிடித்த வனப்பணியாளர்கள்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த 15 அடி நீள ராஜநாகத்தை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தனர்.

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் சுற்றித்திரிகின்றன.

இந்நிலையில் கடையம் அடுத்த கோவிந்தபேரி பகுதியில் மிகவும் நீளமாக பாம்பு ஒன்று விவசாய நிலத்தில் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த பாம்பு பத்திரமாக மீட்பு
விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த பாம்பு பத்திரமாக மீட்பு

இதையடுத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் வனத்துறையினர் அங்கு வந்து பார்த்த போது, அது கொடிய விஷம் கொண்ட, உலகின் மிகவும் நீளமான விஷப்பாம்புகளில் ஒன்றான அரிய வகை ராஜநாகம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து மிகுந்த கவனத்துடன் வனத்துறையினர் அந்த பாம்பை மிகுந்த கவனத்துடன் பத்திரமாக பிடிக்க முயற்சித்தனர். இருப்பினும் பாம்பு அங்கிருந்த புதர்களுக்குள் மறைந்துகொண்டு வனத்துறையினருக்கு கண்ணாமூச்சி காட்டியது.

வனத்தில் விடுவித்த வனத்துறையினரை கண்டு சீறிய ராஜநாகம்
வனத்தில் விடுவித்த வனத்துறையினரை கண்டு சீறிய ராஜநாகம்

சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு, வனத்துறை பணியாளர் ஒருவர் பாம்பின் தலையை பிடித்த பின்னர், 7 பேர் சேர்ந்து அந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர். பிடிபட்ட பாம்பு 15 அடி நீளம் இருந்தது.

இதையடுத்து பத்திரமாக பாம்பை அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்கு எடுத்து சென்ற வனப்பணியாளர்கள், அதனை அங்கு விடுவித்தனர். அப்போது பாம்பு, அவர்களை கண்டு சீறியது, பார்ப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in