ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்திற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு#TNBudget2022

ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்திற்கு
ரூ.3,000 கோடி ஒதுக்கீடு#TNBudget2022

தமிழகத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் (ஜல்ஜீவன்) வழங்கும் திட்டத்திற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கூறுகையில், " மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் போதுமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் 542 கூட்டுக்குடி நீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 2,208 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் 5.64 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 6 புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்" என்றுகூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "குடியிருப்புகளுக்கு குடிநீர் (ஜல்ஜீவன்) வழங்கும் திட்டத்திற்காக 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.