தமிழகத்திற்கென தனி கல்விக்கொள்கை தேவை!

கேட்கிறது இந்திய மாணவர் சங்கம்
தமிழகத்திற்கென 
தனி கல்விக்கொள்கை தேவை!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகத்திற்கென்று தனிக்கொள்கை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படாததை இந்திய மாணவர் சங்கம் விமர்சனம் செய்துள்ளது.

திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகம் பேசி வரும் நிலையில், தமிழகத்திற்கென்று தனி கல்விக்கொள்கை தேவையென ஏன் கேட்கிறீர்கள் என்று இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் வீ.மாரியப்பனிடம் கேட்டோம். அவர் கூறுகையில், "வகுப்புவாதத்தை புகுத்தி, கல்வியை மத்தியத்துவப்படுத்த பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காகத்தான் தேசிய கல்விக்கொள்கையை கொண்டு வந்தது. இதற்கு எதிராக மாணவர் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் போராடி வருகின்றன. இந்நிலையில் அக்கல்வி கொள்கையின் ஷரத்துகளை அமல்படுத்தாமல் தமிழகத்திற்கென தனி கல்விக்கொள்கை கொண்டு வரவேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக நிதிநிலை அறிக்கையில் அந்த அறிவிப்பு இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது" என்று கூறினார்.

வீ.மாரியப்பன்
வீ.மாரியப்பன்

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இல்லையே என்று அவரிடம் கேட்டதற்கு, "கரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் மூலம் தான் பெரும்பாலான மாணவர்கள் கல்வி கற்றனர். அவர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த மடிக்கணினி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய அரசுப்பள்ளிகள், கல்லூரிகள், புதிய விடுதிகள் திறப்பதற்கு நிதி, விலையேற்றத்திற்கு ஏற்ப அரசு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ஆகியவை உயர்த்தி வழங்குவதற்கான எந்த அறிவிப்பும் தமிழக நிதிநிலை அறிக்கையில் இல்லை. போதுமான ஆசிரியர்கள் நியமனத்திற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை" என்று அவர் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in