வெள்ள அபாய எச்சரிக்கை... வைகை அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது!

வைகை அணை
வைகை அணை

வைகை அணையின் நீர்மட்டம் 66.1 அடியை எட்டியுள்ளதால் ஐந்து மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 66.01 அடியை எட்டியுள்ளது.

இதையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வைகை ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி  துவைப்பதற்காகவோ இறங்க வேண்டாம் என்றும், ஆற்றைக் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டாம் என்றும்  வைகை அணை பொதுப்பணிதுறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 66.01 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2642 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 69 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணையில் நீர்இருப்பு 4700 மில்லியன் கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக உயர்ந்தவுடன் இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியாக உயர்ந்த உடன் மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும்.

அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 71 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்த உடன் அணை திறக்கப்படும். தொடர்மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து விரைவில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in