உரிமம் பெறாத இறைச்சிக் கடைகள் மீது குற்ற வழக்கு!

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
உரிமம் பெறாத இறைச்சிக் கடைகள் மீது குற்ற வழக்கு!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உரிய உரிமம் இன்றி, இறைச்சிக்கடையில் ஆடு, கோழி வெட்டப்படுவதாக பனகல் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இறைச்சிக் கடைகளில் விலங்குகள் வெட்டப்படுவதை முறைப்படுத்தும் விதிகளை அரசு நடைமுறைப்படுத்த உத்தரவிடுமாறும் தனது மனுவில் பன்னீர் செல்வம் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உரிமம் இன்றி ஆடு, கோழி வெட்டப்படுவதைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் அவை தொடர்பான விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என்றும் நீதிமன்றத்துக்கு தெரிய வந்தது. எனவே, உடனடியாக அந்த விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றும், அவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் வலியுறுத்தியது. மேலும் உரிமம் இன்றி ஆடு கோழிகளை வெட்டுவோருக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவு செய்யவும், இதர நடவடிக்கைகளை முறைப்படி மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் சம்பந்தப்பட்ட துறையின் இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.