தேர்தல் முடியும்வரை கடைகளை திறக்க மாட்டோம்... தேர்தல் ஆணையத்துக்கு வணிகர் சங்கம் கெடு!

தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பின்  தலைவர்
தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் தலைவர்

”வணிகர்கள் வணிகம் மேற்கொள்வதற்கு 2 லட்சம் ரூபாய் வரை கொண்டு செல்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்” என தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க உள்ளோம். அதற்கு அனுமதிக்காவிட்டால் தேர்தல் முடியும் வரை கடைகளை திறக்கமாட்டோம்” என தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

போலீஸார் வாகன சோதனை
போலீஸார் வாகன சோதனை கோப்பு படம்

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,” வேட்பாளர்கள் 95 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று விதி உள்ளது. அதேபோன்று வியாபாரிகள் 50 ஆயிரத்தில் இருந்து 2 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த தேர்தலின் போதே தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தோம்.

அந்த மனுவில், ஆணையத்தின் கெடுபிடிகளால் வணிகர்கள் பெரும் பாதிப்படைவதாகவும் குறிப்பாக பல்வேறு இடங்களில் காவல்துறையினர், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபடும் போது வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தை பிடுங்கு வதாகவும் தெரிவித்திருந்தோம். அதேபோன்று தற்போதும் நடைபெற்று வருகிறது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

அதனால், தேர்தல் ஆணையம் வியாபாரிகளும் பொதுமக்களும் பணம் எடுத்துச் செல்வதற்கு தேவையற்ற கெடுபிடிகள் காட்டக்கூடாது என்று மாநில தேர்தல் அதிகாரி சந்தித்து மனு அளிக்க இருக்கிறோம். எங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் இதே நிலை நீடித்தால், தேர்தல் முடியும் வரை கடையடைப்பு போராட்டத்தை நடத்துவோம்.

அரசியல் கட்சிகள் தேர்தல் சமயங்களில் பணம் பட்டுவாடா செய்யும்போது தேர்தல் ஆணையம் அமைதியாய் இருக்கிறது. உளவுத்துறைக்கு தெரிந்தும் கண்டு கொள்வதில்லை, ஆனால் வியாபாரிகள் பொதுமக்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு மட்டும் கெடுபிடி விதிக்கின்றனர்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in