தமிழகத்தில் குறைந்தது கரோனா பாதிப்பு, மரணம்

இன்று 575 பேர் பாதிப்பு; 4 பேர் மரணம்
தமிழகத்தில் குறைந்தது கரோனா பாதிப்பு, மரணம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 575 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 4 பேர் மட்டுமே கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தமிழக மருத்துவத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், "தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 34,47,006 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 7,49,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து 33,98,231 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 83,15,889 பேர் வந்துள்ளனர். சென்னையில் 144 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 431 பேருக்குத் தொற்று உள்ளது.

தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 265 தனியார் ஆய்வகங்கள் என 334 ஆய்வகங்கள் உள்ளன. தனிமைப்படுத்துதலில் 9,440 பேர் உள்ளனர். இதுவரை 6,29,80,284 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு நாளில் 65,350 மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,47,581 ஆக உயர்ந்துள்ளது. இன்று 575 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இன்று 144 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 2015 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 1,913 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,00,144 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் இன்று கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,997 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 9,059 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 3 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் ஒருவர். இன்று மாநிலம் முழுவதும் 41,516 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25,306 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 9,827 ஐசியூ படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in