முகக்கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்!

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

நாட்டில் கரோனா 3-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், தமிழகம் முழுதும் பொது இடங்களில் கூடுவோர், பணிக்குச் செல்வோர் என பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றித் திரிவதால், முகக்கவசம் அணியாதோருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் முகக்கவசம் அணியாதோருக்கு 200 ரூபாய் அபராதத் தொகையை வசூல் செய்து வருகின்றனர்.

இருப்பினும் 200 ரூபாய் அபராதம் என்பதை பொதுமக்களில் சிலர் பெரும் பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றி வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் வகையில், 200 ரூபாய் அபராதத் தொகையை 500 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசின் இந்த உத்தரவை உடனே நடைமுறைப்படுத்தி, கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கு உதவிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in