ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வாரம் கூடுதல் கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை கடந்த 7-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான விண்ணப்பம் வரும் 14-3-2022 முதல் 13-04-22 வரை பெறப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. கடந்த 13-ம் தேதியுடன் விண்ணப்பிக்க தேதி முடிந்ததால் பல விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலகெடுவை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை வைத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் 18-4-22 முதல் 26-4-22 வரை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான கால கெடுவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.