விவசாயிகளுக்கு குட்நியூஸ்... பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

விவசாயிகளுக்கு குட்நியூஸ்... பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை வரும் 22-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மகசூல் பாதிக்கும் போது இழப்பீடு வழங்குவதற்காக மத்திய வேளாண் துறை அமைச்சகம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்து கொடுக்கப்படுகிறது. சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ம் தேதி (இன்று) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்து.

ஆனால், மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்தனர். வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருப்பது, தீபாவளி பண்டிகை காலம், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பா, தாளடி பயிர்களுக்கான காப்பீடு காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என தமிழக வேளாண் ஆணையம் சார்பில் மத்திய வேளாண் துறைக்கு கடிதம் எழுதப்பட்டது.

அதனை பரிசீலனை செய்த மத்திய வேளாண் அமைச்சகம் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை வரும் 22-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து கூடுதல் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான சேவை மையங்கள் விவசாயிகளுக்கு ஏற்ப திறந்து இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in