மே 21-ல் தேர்வு, ஜூனில் ரிசல்ட்: குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு தேதி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் பேட்டி
மே 21-ல் தேர்வு, ஜூனில் ரிசல்ட்: குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு தேதி இன்று வெளியாகியுள்ளது. 5,831 காலி பணியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தலைவர் பாலச்சந்திரன், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ம் தேதி நடைபெறும். பிப்ரவரி 23 முதல் மார்ச் 23-ம் தேதி விண்ணப்பிக்கலாம். இத்தேர்வின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும். அத்துடன் குரூப்- 2 தேர்வில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள், குரூப் 2 தேர்வில் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ்மொழி தகுதித் தேர்வாக இருக்கும். பொது அறிவியல் பாடத்துக்கு 75 மதிப்பெண்கள், நுண்ணறிவு கேள்விகளுக்கு 25 மதிப்பெண்கள் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 நிலையில் 116 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. குரூப்-2 ஏ நிலையில் 5,413 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுகள் இனி காலை 9.30 முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும். பிற்பகலில் நடைபெறும் தேர்வு வழக்கம்போல் மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறும்.

32 நகரங்களில் 117 மையங்களில் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வின்போது கருப்பு மை கொண்ட பேனா, ஜெல், பால்பாயின்ட் பேனா பயன்படுத்த வேண்டும். காவல் துறையில் சிறப்பு பிரிவு உதவியாளர் பணிக்கு முதன்முறையாக தேர்வு நடத்தப்படுகிறது. இரண்டு தேர்வுகளையும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். வருகிற 23-ம் தேதி குரூப் 2 , குரூப் 2 ஏ தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.