ரேஷன் கடையை உடைத்து பொருட்களை சூறையாடிய காட்டு யானைகள்: தோட்டப்பயிர்களும் நாசம்!

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட தக்காளி, வாழைப் பயிர்கள்
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட தக்காளி, வாழைப் பயிர்கள்

கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள் ரேஷன் கடையை அடித்து உடைத்ததோடு, அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த தக்காளிகளையும் சேதப்படுத்தியது. இதனால், விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர்.

நேற்று அதிகாலை நேரம் பேரூர் அருகே உள்ள வனப்பகுதிக்குள் இருந்து 14 யானைகள் கூட்டமாக வெளியேறியது. இவை தீத்திபாளையம் பகுதியில் புகுந்தன. அதில் ஒரு தாய் மற்றும் அதன் குட்டியானை இரண்டும் ஊருக்கு அருகே இருந்த ரேஷன் கடையின் கதவை உடைத்து, கடைக்குள் இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகளை வெளியே எடுத்து சாப்பிட்டன.

மற்ற யானைகள் அனைத்தும், அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் அறுவடை செய்து டிப்பர்களில் வைத்திருந்த தக்காளி மற்றும் வாழைகளைத் தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதி கொங்கு பெரியசாமி கூறுகையில், 14-க்கும் மேற்பட்ட யானைகள் நள்ளிரவு வனத்திலிருந்து வெளியேறு தீத்திபாளையம் ஊருக்குள் புகுந்தன.

இப்பகுதியில் உள்ள தக்காளி மற்றும் வாழைத் தோட்டங்களுக்குச் சென்று யானைகள் உணவு உட்கொண்டன. அத்துடன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தக்காளி டிப்பர்களை சூறையாடின. தோட்டம் மட்டுமின்றி அருகாமையில் உள்ள ரேஷன் கடைக்குள் புகுந்த காட்டுயானைகள் ரேஷன் கடையில் உள்ள உணவுப் பொருட்களையும் உட்கொண்டு ரேஷன் கடையும் சேதப்படுத்தின.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிராம மக்களை உஷாருடன் இருக்க சொன்னதோடு, அங்கு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக தோட்டத்திற்குள் மட்டும் வரும் யானைகள் தற்போது ஊருக்குள்ளும் புகுந்திருப்பதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!

மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in