லைசன்ஸ் புதுப்பிக்க லஞ்சம், பொறியில் சிக்கிய மின்வாரிய கண்காணிப்பாளர்!

லைசன்ஸ் புதுப்பிக்க லஞ்சம், பொறியில் சிக்கிய மின்வாரிய கண்காணிப்பாளர்!
Updated on
1 min read

லைசன்ஸ் புதுப்பிக்க 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய கண்காணிப்பாளர் லஞ்ச ஓழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை செங்குன்றத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். மின்வாரிய ஒப்பந்ததாரரான இவர் தனது செம்புகுட்டி அசோசியேசன் என்ற மின் நிறுவனத்தின் ஏ கிரேட் லைசன்ஸை புதுப்பிப்பதற்காக கிண்டியில் உள்ள மின்வாரிய ஒப்பந்தத்தாரர்களுக்கான லைசென்ஸ் வழங்கும் பிரிவு அலுவலகத்தில் கடந்த மே 5 ம் தேதி விண்ணப்பத்திருந்தார். 

மூன்று மாதங்களுக்கு பிறகு கிருஷ்ணகுமார் கடந்த 10 ம் தேதி கிண்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தனது லைசன்ஸ் புதுப்பிப்பது தொடர்பாக ஊழியர்களிடம் கேட்டப்போது லைசன்ஸ் தயாராகி விட்டதாகவும், கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் சென்று வாங்கிக் கொள்ளுமாறும்  தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் சென்று கேட்டதற்கு, பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து விட்டு வாங்கிச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். அதற்கு கிருஷ்ணகுமார் தன்னால் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் தர இயலாது என கூறியிருக்கிறார். அதற்கு ஸ்ரீதர்,  இரண்டு நாட்கள் கழித்து வந்து 3000 ரூபாய் கொடுத்து விட்டு லைசென்ஸை பெற்றுச் செல்லுங்கள் என கறாராக கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணகுமார் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் அளித்தார். 

லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசனையின்படி ரசாயன பவுடர் தடவிய 3000 ரூபாயை எடுத்துக் கொண்டு நேற்று மாலை கிண்டி அலுவலத்திற்கு சென்ற கிருஷ்ணகுமார், அங்கிருந்த கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கண்காணிப்பாளர் ஸ்ரீதரை கையும் களவுமாக கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in