`பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து, அதனால்தான் திட்டம் மாற்றம்'

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
`பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து, அதனால்தான் திட்டம் மாற்றம்'

"பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து. அதனால்தான் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது" என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திருமண உதவி திட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய வேலுமணி, திருமண உதவி திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நிதியுதவி அளித்து திட்டத்தை தொடரவேண்டும். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதால்தான் நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் சந்தேகம்படுவதாக கூறினார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "திருமண உதவி திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் பேர் மட்டுமே பயனடைந்து வந்தனர். உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் 6 லட்சம் பேர் பயனடைய உள்ளனர். கட்சி வேறுபாடின்றி உயர்கல்வி உறுதி திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும். திருமண உதவி திட்டத்தில் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது. பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து. அதனால் தான் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

திருமணம் என்ற தகுதிக்கு முன்னாள் கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும். சமூக நிதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை அடிப்படையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் பெண்ணுரிமை என்ற அடிப்படையில் திருமண உதவி திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம். அதிமுக ஆட்சியில் விண்ணப்பித்தவர்களில் 24.5% பேர் மட்டுமே தகுதியுடையவர்களாக கண்டறியப்பட்டது. கல்வி என்ற நிறைந்த சொத்தை பெண்களுக்கு வழங்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in