ஈஸ்டர் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை

தேவலாயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை
தேவலாயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை

யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு நேற்று நள்ளிரவு பிரார்த்தனை நடைபெற்றது.

யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் புத்தாடை உடுத்தி, தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை, திருப்பலியில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் சாந்தோம், பெசன்ட் நகர் தேவலாயங்கள், வேளாங்கண்ணி மற்றும் பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் புனித தீர்த்தம் வழங்கிய அருட்தந்தை
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் புனித தீர்த்தம் வழங்கிய அருட்தந்தை

திருச்சி பாலக்கரை பசிலிக்கா ஆலயம், மேலப்புதூர் தூய மரியன்னை ஆலயம், லூர்து அன்னை ஆலயம், புத்தூர் பாத்திமா ஆலயம், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சவேரியார் பேராலயம், நாகர்கோவில் கோட்டார் சவேரியார் தேவாலயம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களுக்கு திருப்பலியில் பூஜிக்கப்பட்ட தீர்த்தம் வழங்கப்பட்டது.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் உள்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in