ஈஸ்டர் பண்டிகை... குடும்பத்துடன் கொண்டாட கரைக்குத் திரும்பும் மீனவர்கள்!

சொந்த ஊர் திரும்பும் மீனவர்கள்
சொந்த ஊர் திரும்பும் மீனவர்கள்

ஈஸ்டர் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா வளைகுடா நாடுகளின் ஆழ்கடல் பகுதிகளில் தங்கி இருந்து மீன்பிடித் தொழிலை ஈடுபட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடல் மார்க்கமாக சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மீனவர்கள் சொந்த ஊர் திரும்புவதால் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் களைகட்டி உள்ளது. கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஈஸ்டர் பாண்டியையும் தவக்காலத்துடன் நிறைவு செய்து கொண்டாடுகின்றனர். அந்த வகையில் உலகம் முழுவது வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர்,

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை குளச்சல், தேங்காய்ப்பட்டிணம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து ஏராளமான விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். 15 நாள் 20 நாள் வரை ஆழ்கடலில் தங்கி இவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். தமிழகத்திற்கு வெளியே குஜராத், கோவா, கேரளாவிலும் குமரி மாவட்ட மீனவர்கள் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

புனித வெள்ளி
புனித வெள்ளி

இந்த நிலையில், ஈஸ்டர் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக அந்த பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடல் மார்க்கமாக சொந்த ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். புனிதவெள்ளி நாளான இன்று மாலைக்குள் அனைவரும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களுக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.

ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை முடிந்து ஏப்ரல் ஒன்றாம் தேதி மீண்டும் அவர்கள் தொழிலுக்குச் செல்வார்கள் என கூறப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மீனவர்கள் சொந்த ஊர் வருவதால் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் களைகட்டி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in