துபாய், அபுதாபி பயணம் வெற்றி: சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

துபாய், அபுதாபி பயணம் வெற்றி: சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

என்னுடைய பயணம் வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமான பயணமாக அமைந்தது என்று கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆறு தொழில் நிறுவனங்களோடு ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

அரசுமுறை பயணமாக கடந்த 24-ம் தேதி துபாய் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்துவைத்ததோடு, 2 நாட்களாக துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதன் பின்னர் அபுதாபி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நம்மில் ஒருவர் நம்ம முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து தனி விமானம் மூலம் இரவு சென்னைக்கு திரும்பினார். தமிழகம் திரும்பிய முதல்வருக்கு, அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக வெளிநாட்டினர் பாராட்டினர்.

தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 6 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தக்களும் வெறும் காகித பூக்களாகவே இருந்தன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in