இரட்டை ரயில் பாதை பணிகள் தொடக்கம்... ஏப்ரல் 1 வரை ரயில்கள் ரத்து!

இரட்டை ரயில் பாதை
இரட்டை ரயில் பாதை

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'நாகர்கோவிலில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும், 06643 கன்னியாகுமரி ரயில், மார்ச் 29-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும், 06628 கொச்சுவேலி ரயில், மார்ச் 29-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது.

ரயில் சேவை ரத்து
ரயில் சேவை ரத்து

இதேபோல், திருநெல்வேலியில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் 06642 நாகர்கோவில் ரயிலும் மார்ச் 29-ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்படும் 06647 திருநெல்வேலி ரயிலும் மார்ச் 29-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும், 06643 திருநெல்வேலி ரயில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 1-ம் தேதிவரை ரத்து செய்யப்படுகிறது, கன்னியாகுமரியில் இருந்து மாலை 4 ணிக்கு புறப்படும் 06773 கொல்லம் ரயில், மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

கொல்லத்தில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்படும் 06772 கன்னியாகுமரி ரயில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் 06435 நாகர்கோவில் ரயில், 06670/06771 கொல்லம் – ஆலப்புழா – கொல்லம் மற்றும் 06425 கொல்லம் – திருவனந்தபுரம் ஆகிய ரயில்களும் மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in