
``இலங்கை மக்களுக்கு உதவ நிதி அளியுங்கள்'' என தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டிய தருணம் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக அனுப்பி வைக்கப்படும் என்றும் https://ereceipt.tn.gov.in.cmprf/cmprt.html- என்ற மின்னணு பரிவர்த்தனை மூலம் நிதியுதவி வழங்கலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இலங்கை மக்களுக்கு நிதி அனுப்புவதற்கான வங்கி முகவரியை முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
தலைமைச் செயலக கிளை
கணக்கு எண் 117201000000070
IFSC Code - IOBA0001172
CMPRF பான் எண் - AAAGC0038F