கலைஞர் போல பேசத்தெரியாது, ஆனால் உழைக்கத் தெரியும்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

கலைஞர் போல பேசத்தெரியாது, ஆனால் உழைக்கத் தெரியும்:
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

நான் கலைஞர் அல்ல; அவரைப்போல் எழுதத் தெரியாது, பேசத் தெரியாது. ஆனால் அவரைப்போல் உழைக்கத் தெரியும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி சட்டப்பேரவையில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசுகையில்," நான் கலைஞர் அல்ல; அவரைப்போல் எழுதத் தெரியாது, பேசத் தெரியாது. ஆனால் அவரைப்போல் உழைக்கத் தெரியும்" என்று கூறினார்.

மேலும், "ஆட்சி பொறுப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓராண்டு காலத்தில் உண்மையுடன் உழைத்தேன்; என் மீது கலைஞர் மற்றும் பேராசிரியர் அன்பழகன் வைத்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன்" என முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in