நம்ம ஆவின் பால் எந்தெந்த நாடுகளுக்கு போகுது தெரியுமா?

நம்ம ஆவின் பால் எந்தெந்த நாடுகளுக்கு போகுது தெரியுமா?

வெளிநாடுகளுக்கு ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்றும் இதர வெளிநாடுகளுக்கும் பால் பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும் பால்வளத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாணமை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம்), மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்ற நிலையில் பால்வளத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், தரமதிப்பினை கூட்டவும், பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை கூட்டவும், ஆவின் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் ஒன்றியம் அதிவெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட UHT பால் மற்றும் நறுமண பால் டெட்ரா பாக்கெட்டுகளுக்கு ஏற்றுமதி உரிமம் பெற்றுள்ளது. ஈரோடு ஒன்றியம் நெய் ஏற்றுமதிக்கான உரிமம் பெற்றுள்ளது. திருவண்ணாமலை பால் மற்றும் பால் பவுடர் ஆலை, கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் மற்றும் நெய் ஏற்றுமதிக்கான் உரிமம் பெற்றுள்ளது.

சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார் மற்றும் துபாய் போன்ற அயல் நாடுகளுக்கு ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறது. இதர வெளிநாடுகளுக்கும் பால் பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரை வெளிநாடுகளுக்கு ரூ.355.30 லட்சம் மதிப்பிலான 7,15,476 லிட்டர் பால் மற்றும் ரூ.115.39 லட்சம் மதிப்பிலான நெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.0.99 லட்சம் மதிப்பிலான 1,107 லிட்டர் நறுமணப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆவின் பொருட்களை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் விற்பனை செய்வதற்கான மொத்த விற்பனையாளர்களுக்கான நியமன உத்தரவையும், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மன், ஓமன், கத்தார், கனடா மற்றும் அமெரிக்கா (கலிபோர்னியா) ஆகிய வெளிநாடுகளில் ஆவின் பொருட்களை விற்பனை செய்வதற்கு வணிக ஏற்றுமதியாளர்களுக்கான வணிக ஒப்பந்த ஆணைகளையும் வழங்கியுள்ளார்" என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.