தமிழக அரசின் நிதிநிலை எவ்வளவு தெரியுமா?#TNBudget2022

தமிழக அரசின் நிதிநிலை எவ்வளவு தெரியுமா?#TNBudget2022

தமிழக அரசின் நிதிநிலை எவ்வளவு என்பது குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து பேசுகையில், இந்த அரசின் சிறப்பான நிதி நிர்வாகத்தால் வரவு, செலவுத் திட்டத்தில் கணக்கிடப்பட்ட 58,692.68 கோடி ரூபாய்க்கு மாறாக, திருத்த மதிப்பீடுகளில் வருவாய் பற்றாக்குறை 55,272.79 கோடி ரூபாயாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4.33 சதவீதம் என முன்னர் மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை, திருத்த மதிப்பீடுகளில் 3.80 சதவீதமாகக் குறைந்துள்ளது. வரவு, செலவுத் திட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1,42,799.93 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சொந்த வரியில்லாத வருவாய் 15,537.24 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வருவாய் வரவினங்கள் 2,31,407.28 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த வருவாய் செலவினங்கள் 2,84,188.45 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளன. வருவாய் பற்றாக்குறை 52,781.17 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை 90,113.71 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in