'நான் முதல்வன் திட்டம்' எதற்குத் தெரியுமா?: விளக்குகிறார் பொன்முடி

'நான் முதல்வன் திட்டம்' எதற்குத் தெரியுமா?: விளக்குகிறார் பொன்முடி

"பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ் பேசுகையில்," ஊட்டி தொகுதி குந்தா வட்டம் மஞ்சூரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். அதற்குப் பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "வரும் காலத்தில் தேவை ஏற்பட்டால், பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், " பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே 'நான் முதல்வன் திட்டம்' கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்படும். 10 கல்லூரிகளில் பிஹெச்டி படிப்புகளைத் தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும். 26 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். 55 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in