அண்ணாமலை பல்கலை.யின் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம்: யுஜிசி எச்சரிக்கை

அண்ணாமலை பல்கலை.யின் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம்: யுஜிசி எச்சரிக்கை

``அங்கீகாரம் வழங்கப்படாததால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம்'' என யுஜிசி எச்சரித்துள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2014-15 ஆண்டு வரை மட்டுமே தொலைதூர படிப்புகளுக்கான வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள யுஜிசி, அதன்பின்னர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கூறியுள்ளது.

இதனால், அங்கீகாரம் பெறாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கதல்ல எனவும், வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.