சொந்த சின்னத்தில்தான் போட்டி; 2 மக்களவை, 1 ராஜ்யசபா சீட் வேண்டும் - திமுகவிடம் மதிமுக கோரிக்கை!

ஸ்டாலின் வைகோ
ஸ்டாலின் வைகோ

மக்களவைத் தேர்தலில் சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன் ராஜ் தெரிவித்துள்ளார்.

மதிமுக பேச்சு வார்த்தை குழு
மதிமுக பேச்சு வார்த்தை குழு

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுக தொடர்ந்து தேர்தல் குழுக்கள் அமைத்து அடுத்ததடுத்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் மதிமுக-வுடனான தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவினருடன், அர்ஜூன்ராஜ் தலைமையிலான மதிமுக தேர்தல் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வைகோ, துரை வைகோ
வைகோ, துரை வைகோ

அதில், மதிமுக சார்பில் திருச்சி, விருதுநகர், காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியல் திமுகவிடம் வழங்கப்பட்டது. கடந்த முறை திமுக கூட்டணியில் ஈரோடு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி மதிமுகவுக்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இம்முறை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்ப்பதால், அவருக்கு ஏற்ற வகையில் விருதுநகர் தொகுதியை வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூன்ராஜ் மதிமுக
அர்ஜூன்ராஜ் மதிமுக

இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன்ராஜ், “திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை சுமூகமாக இருந்தது. திமுகவிடம் விருப்பட்டியல் அளித்துள்ளோம். அதில் 2 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களை ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளோம். இம்முறை மதிமுக வேட்பாளர்கள் கட்சியின் சொந்த சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும், திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in