நாகர்கோயில், மங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம்!

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாம்பரம்- நாகர்கோயில், மங்களூரு- தாம்பரம், நாகர்கோயில் – மங்களூரு – ஆகிய மூன்று வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் 10, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதேபோல், நாகர்கோயில் – மங்களூரு இடையே வரும் 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

மங்களூரு – தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயிலானது கோழிக்கோடு, பாலக்காடு, சேலம், அரக்கோணம் வழியாக சென்னை தாம்பரம் வந்தடையும் வகையில் வரும் 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in