கள்ளக்குறிச்சி வன்முறை: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

கனியாமூர் கலவரம்
கனியாமூர் கலவரம்

பள்ளி மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட கலவரம் காரணமாக கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம், நைனார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து இப்பகுதியில் குவிவதை தடுக்கும் விதமாக இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவி ஶ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன் இன்று திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் திடீரென கலவரக்காரர்களாக மாறினர். அவர்களின் வன்முறைக்கு காவல்துறையினர், அவர்களது வாகனங்கள், பள்ளி வாகனங்கள் என எதுவும் தப்பவில்லை. அனைத்தும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இதையடுத்து அங்கு வரவழைக்கப்பட்ட அதிரடி படையினர், கலவரக்காரர்களை தடியடி நடத்தி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் விரட்டி அடித்தனர். இதனையடுத்து சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகம் முழுவதுமாக போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. எனவே மேலும் கலவரக்காரர்கள் இங்கு வராமலும், ஒன்று திரளாமலும் தடுக்கும் வகையில் கனியாமூர் மற்றும் அதனைச் சுற்றிலும் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in