
பேரிடர் காலங்களில் அவசரகால தகவல்தொடர்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில், நாளை(அக்.20) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செல்போன் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
பேரிடர் மேலாண்மைக்கான இந்த சோதனையின்போது பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், எதிர்வினையாற்ற வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
மத்திய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள், மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர் காலங்களில் அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்த, இந்த செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை ஓட்டத்தை மேற்கொள்கின்றன.
செல் ஒலிபரப்பு எச்சரிக்கை முறை மூலம், ஒரு செல்போன் கோபுரத்தின் எல்லைக்குட்பட்ட அனைத்து செல்பேசிகளுக்கும், ஒரே நேரத்தில் பேரிடர் எச்சரிக்கைகளை அனுப்பலாம். சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்கள் மற்றும் எதிர்பாரா இதர செயற்கை பேரிடர்கள் காலத்தில், அவசரகால எச்சரிக்கைகளை வழங்குவதில் இவை பேருதவியாக இருக்கும்.
இந்த சோதனை நாளை தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கின்றன. இவ்வாறு பொதுமக்களின் செல்போன்களில் பெறப்படும் அவசர எச்சரிக்கை என்பது முழுக்கவும் பரிசோதனை அடிப்படையிலானது. உண்மையான அவசரநிலையைக் குறிப்பதல்ல. எனவே இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், எதிர்வினை ஆற்றத் தேவையில்லை எனவும் பொதுமக்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே நாளைய செல் ஒலிபரப்பு எச்சரிக்கை குறித்து பொதுமக்கள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை. இப்படியான பேரிடர் கால எச்சரிக்கை தொழில்நுட்பம், அறிமுகம் செய்யப்படுகிறது என்பதை புரிந்துகொண்டால் போதுமானது.
இதையும் வாசிக்கலாமே...
உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!
மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!
’லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!
வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!
அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!