சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தோமா?- மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் தலைவர் விளக்கம்

சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தோமா?- மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் தலைவர் விளக்கம்

சம்ஸ்கிருதத்தில் முதலாமாண்டு மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது வழக்கம்போல், சம்ஸ்கிருதத்தில் முதலாமாண்டு மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, மதுரை மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது தமிழக அரசு.

அதே நேரத்தில், மருத்துவமனை முதல்வர் ரத்தனவேலு, "அரசு வெப்சைட்டில் இருந்ததால், இதை சரி என நினைத்து மாணவர் தலைவர் வாசித்துவிட்டார். பேராசிரியர்களிடமோ, என்னிடமோ அவர் அனுமதி கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தால், இது தடுக்கப்பட்டிருக்கும்’’ என்று கூறியிருந்தார்.

இதனிடையே, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மருத்துவக் கல்லூரி டீன் அவர்களுக்குத் தெரிவிக்காமல் மாணவர் தலைவர் இந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்று பல டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள் என்றும் அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமரவேல் மற்றும் மாணவர்கள் இன்று அளித்துள்ள விளக்கத்தில், "ஆங்கில மொழிபெயர்ப்பில் மட்டுமே உறுதிமொழி எடுத்தோம். சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை. அவசர கதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் மதுரை டீன் ரத்தினவேல் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. முழுக்க மாணவர்கள் தயாரித்த நிகழ்வு அது" என்று கூறியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in