சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்?... வெடித்தது புதிய சர்ச்சை!

மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ்

முறையான சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே அவசர கதியில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு (EIA) மேற்கொள்வது அவசியமாகும். இந்த பணியை மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை (TOR) வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதியன்று விண்ணப்பம் செய்தது. இதன் அடிப்படையில், எய்ம்ஸ் கோரிய அனுமதியை தமிழ்நாடு அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நேற்றுதான் வழங்கியது.

மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ்

நேற்று வழங்கப்பட்ட அனுமதியின்படி ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும். சுற்றுச்சூழல் அனுமதி பெறும் வரை திட்ட அமைவிடத்தில் வேலி மற்றும் பாதுகாவலர் அமர கூரை மட்டுமே அமைக்க முடியும். அதனை தவிர்த்து, அந்த இடத்தில் வேறு எந்த கட்டுமானப் பணிகளை செய்தாலும், அது சட்டவிரோதம் என மத்திய அரசின் அலுவல் உத்தரவு தெரிவிக்கிறது.

மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ்

ஆனால், சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை பெறப்படாத நிலையிலேயே எய்ம்ஸ் கட்ட தேர்வான இடத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பொருட்களை வைப்பதற்கான கூடம், லாரி எடைமேடை போன்றவற்றை எய்ம்ஸ் நிர்வாகம் அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தற்போது மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகள் அனைத்தும் சட்ட விதிமீறலாகும் என்ற விமர்சனம் கிளம்பியுள்ளது.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்து, 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. மதுரையுடன் அறித்த நாட்டின் பிற எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் திறந்து வைத்தார். ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமானப்பணிகளே இன்னும் தொடங்கவில்லை. இந்த விவகாரம் மக்களவைத் தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளால் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in