மழை பாதிப்பு: சமூக வலைதளங்களில் பீதி கிளப்பினால் நடவடிக்கை

மழை பாதிப்பு: சமூக வலைதளங்களில் பீதி கிளப்பினால் நடவடிக்கை

டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் சென்று சேரவும், தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கவும், புதிய பாதிப்புகளை கவனப்படுத்தவும் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால், அதே சமூக வலைதளங்களில் பொதுமக்களிடையே பீதியையும், பதட்டத்தையும் கூட்டும் வகையில் சிலர் விஷமத்தனமான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி உண்மைக்குப் புறம்பான, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் பதிவுகளை மேற்கொள்வோர் மீது, சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

டிஜிபி சைலேந்திரபாபு
டிஜிபி சைலேந்திரபாபு

இது தொடர்பாக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையின் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காகவும், இயல்பு வாழ்க்கையை மீட்பதற்காகவும் காவல் துறை உட்பட பல்வேறு அரசுத் துறையினரும் ஒருங்கிணைந்து போராடி வருகிறார்கள். இந்த வேளையில், சமூக விரோதிகள் சிலர் சமூக ஊடகங்கள் வாயிலாக மழை, வெள்ளம் குறித்து அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் காணொலிகள், புகைப்படங்கள் மற்றும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்தப் பதிவுகளில், கடந்த காலங்களில் தமிழகம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களின் வெள்ள பாதிப்புகளை தற்போது நடைபெற்றது போன்று சித்தரித்து, பின்னணிக் குரலுடன் வெளியிடுகிறார்கள். இப்படிச் சமூகப் பொறுப்பின்றி, உண்மைக்குப் புறம்பான பதிவுகளை மேற்கொள்வோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in