காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை

காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை

தமிழக காவல்துறைக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் நிலங்களை அனைத்து பிரிவு காவல் அதிகாரிகளும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், காவல் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் காவல்துறைக்கு சொந்தமான நிலங்களை தூய்மையாக பாதுகாக்கும் பொருட்டாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையை தூய்மை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தூய்மை பணியை மேற்பார்வையிட ஒரு காவல் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தலைமை பொறுப்பு அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் சம்மந்தபட்ட இடங்களை பார்வையிட்டு, சிறந்த காவல் நிலையங்கள் அல்லது அலுவலகத்தை தேர்வு செய்து வெகுமதி வழங்குமாறும், இந்த அறிவுரையை காவலர்கள் சரிவர கடைப்பிடிக்கவில்லை என்பது தெரிய வருவதாகவும், எனவே இனி வரும் காலங்களில் அறிவுரையை பின்பற்றி காவல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களை தூய்மையாக பரமாரிக்குமாறு தெரிவித்துள்ளார்.

வருகிற சனிக்கிழமையன்று தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகள் மற்றும் சுற்றுப்புறத்தையும் தூய்மை செய்து அதன் அறிக்கையை வரும் 11-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ள அவர், இந்த அறிவிப்பை தவறாமல் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.