உள்வாங்கிய அக்னிதீர்த்தக் கடல்... அச்சத்தில் பக்தர்கள்!

உள்வாங்கிய அக்னிதீர்த்தக் கடல்... அச்சத்தில் பக்தர்கள்!
உள்வாங்கிய அக்னிதீர்த்த கடல்

ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடல் கடந்த சில தினங்களாக உள்வாங்கிய நிலையிலேயே காணப்படுவதால் அங்கு வரும் பக்தர்களும் உள்ளூர் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

இந்துக்களின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்கும் ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்த கடலில் நீராடுவது பக்தர்களின் வழக்கம். அதற்கேற்ற வகையில் ஆழம் குறைவாக அந்தக் கடல் பகுதி காணப்படும்.

கடந்த சில தினங்களாக ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசிவருவதுடன் கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் அக்னிதீர்த்த கடல் உள்வாங்கிய நிலையில் காணப்படுகிறது.

இந்நிலையில் நாளை அமாவாசை தினம் என்பதால் இன்று வழக்கத்தைவிட கடல் வெகு தொலைவிற்கு உள்வாங்கியிருக்கிறது. கடல் உள்வாங்கியதால் அடியில் இருந்த பவளப்பாறைகள் தெளிவாக வெளியே தெரிந்தன.

கோடை விடுமுறை மற்றும் இன்று வார விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் கடலில் குளிப்பதற்கு வந்தபோது கடல் உள்வாங்கி இருப்பதால் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர். அதோடு இப்படி உள்வாங்கி இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுமோ என்ற அச்சத்தில் பக்தர்களும் உள்ளூர் மக்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in