அந்தமானில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

அந்தமானில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவித்திருந்தது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பதூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் தரைக்காற்று 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும் தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in