காதலர்களுக்கு அனுமதி மறுப்பு; நாய்களுக்கு திருமணம்!- காதலர் தின கலாட்டா

காதலர்களுக்கு அனுமதி மறுப்பு; நாய்களுக்கு திருமணம்!- காதலர் தின கலாட்டா

காதலர் தினத்தையொட்டி புதுச்சேரி பாரதி பூங்காவிற்குள் காதலர்களை அனுமதிக்க காவல்துறையினர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து காதலர் தினத்துக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலன் காதலிக்கும், காதலி காதலனுக்கும் விதவிதமாக பரிசுப் பொருட்களையும், அன்பையும் பரிமாறி கொண்டனர். இது பக்கம் நடந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நெல்லை மாவட்டம், பிராஞ்சேரி பகுதியில் உள்ள இந்து அமைப்பினர் சிலர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இரண்டு நாய்களை பிடித்து அதன் கழுத்தில் மாலை போட்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இன்று சுற்றுலா பயணிகள், காதலர்கள் குவிந்தனர். இதன்காரணமாக புதுவையில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முழுவதும் நிரம்பி வழிந்தன. புதுச்சேரி பாரதி பூங்காவிற்குள் காதலர்களை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனை கண்டித்து ஒன்றுதிரண்ட சமூக அமைப்பினர் வெளியில் காத்துக் கொண்டிருந்த காதலர்களுடன் கேட்டை திறந்து உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கடற்கரைக்கு சென்ற அவர்கள் காதலர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in