
புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொதுமக்களிடயே அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த மாவட்டத்தில் மட்டும் 130 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.