சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்யலாம்!

பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு
சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்யலாம்!

அரசின் வருவாயை பெருக்கும் நோக்கில் இம்மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் பதிவு அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "பொது மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாய் பெருக்கும் நோக்கிலும் மார்ச் 2022 மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவண பதிவினை ஏற்படுதற்கு, ஏதுவாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பதிவு அலுவலகங்களும் வழக்கம் போல் காலை 10 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு பதிவு விதிக்கு உட்பட்டு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்பட வேண்டும். மேலும், அன்றைய தினங்களில் ஸ்டார் 2.0 திட்டப்படி அனைத்து அலுவலகங்களிலும் பதிவுப் பணி இணையவழி தடையின்றி நடைபெற ஏதுவாக பொதுமக்களுக்கு முன்பதிவு செய்திடும் வசதி மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்களுக்கான ஹெல்ப் டெஸ்க் மற்றும் ஹெல்ட் லைன் வசதி ஆகியவற்றினை எவ்வித குறைபாட்டுக்கும் இடமின்றி ஏற்படுத்திட டிசிஎஸ் மென்பொறியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதை கண்காணிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.