வாடிக்கையாளர்களே, பிப்ரவரி 19-ல் வங்கிகளுக்கு விடுமுறை!

வாடிக்கையாளர்களே, பிப்ரவரி 19-ல் வங்கிகளுக்கு விடுமுறை!

பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் பகுதிகளில், பொது விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ள அதே நேரத்தில், தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் அன்றைய தினம் வங்கிகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே இந்த தேர்தலில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி, தேர்தல் நடக்கும் பகுதிகளில் மட்டும், வரும் 19-ம் தேதி அரசின் பொது விடுமுறை நாளாக அறிவித்து, தலைமை செயலர் இறையன்பு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். அனைத்து விதமான அரசுத் துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் இயங்காது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வரும் 19-ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தவிர்த்து, மற்ற பகுதிகளில் வங்கிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.