காளி சிலைக்கு மிளகாய் பொடி அபிஷேகம்: சாபமிட்ட பெண் சாமியாரால் தெறித்து ஓடிய அதிகாரிகள்!

காளி சிலைக்கு மிளகாய் பொடி அபிஷேகம்: சாபமிட்ட பெண் சாமியாரால் தெறித்து ஓடிய அதிகாரிகள்!

ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலை அகற்ற அதிகாரிகள் வந்த போது, அம்மனுக்கு மிளகாய்ப் பொடியால் அபிஷேகம் செய்த பெண், உன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் அவர்களைச் சுடுகாட்டுக்கு அனுப்ப வேண்டும் என சாபமிட்டார். இதைக் கண்டதும் அதிகாரிகள் அங்கிருந்து தலைதெறித்து ஓடினார்கள்.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம் அப்பகுதியினரை நிம்மதி இழக்கச் செய்துவிடும். இதனால் அடிக்கடி நீதிமன்றம் தலையிட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றத் தமிழக அரசிற்கு உத்தரவு பிறப்பிக்கும். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் நெருங்கும் நேரத்தில் அதிகாரிகள் கெடுபிடி காட்டி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கம் பகுதியில், நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள காளி கோயில் ஒன்றை அகற்றுவதற்காக அதிகாரிகள் சென்றனர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கிருந்த திருநங்கைகள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களின் எதிர்ப்பையும் மீறி அந்த கோயிலை அகற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண் சாமியார் ஒருவர் அந்த கோயிலில் உள்ள காளியம்மன், நாகாத்தம்மன், வீரபத்திரன் சிலைகளுக்கு மிளகாய்ப் பொடியால் அபிஷேகம் செய்தார். அப்போது அவருக்கு சாமி வந்த நிலையில், ‘ஆத்தா உக்கிரமாக இருக்கிறாடா.  உன் இடத்தை எவன் அபகரிக்க நினைக்கிறானோ அவனைச் சுடுகாட்டுக்கு அனுப்பு.’ என சாபம் விட்டார். இதைக் கண்டு ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து தெறித்து ஓடினர். இதைத் தொடர்ந்து கோயிலை அகற்றக் கோயில் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in