காஷ்மீரிலிருந்து சிஆர்பிஎப் வீரர் வேதனை புகார்: அதிரடி நடவடிக்கை எடுத்த டிஜிபி

காஷ்மீரிலிருந்து சிஆர்பிஎப் வீரர் வேதனை புகார்: அதிரடி நடவடிக்கை எடுத்த டிஜிபி

காஷ்மீரில் இருந்து சிஆர்பிஎப் வீரர் வெளியிட்ட காணொலி வீடியோ புகாரில் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் நீலமேகம் நேற்று தமிழக முதல்வர் மற்றும் தமிழக டிஜிபிக்கு காணொலி வாயிலாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், தான் மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் பணியாற்றி வருவதாகவும், தற்பொழுது காஷ்மீரில் பணியில் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், நேற்று தனது வீட்டில் வயதான தாய், தந்தை, மனைவி, 10 மாத பெண் குழந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் புகுந்து மனைவி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு என் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் என்னால் எப்படி இங்கு பணியாற்ற முடியும். எனவே தமிழக முதல்வர் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை எடுக்கவேண்டும் என காணொலியில் கேட்டு கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு, நீலமேகம் மற்றும் அவரது மனைவி கலைவாணியை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் டிஜிபி உத்தரவின் பேரில் ஜம்புநாதபுரம் போலீஸார் கலைவாணி புகாரில் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். மேலும் இந்த தகவலை டிஜிபி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in