ஊழல் அதிகாரிகள் ‘உள்ளே’ போவார்கள்!

அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை
ஊழல் அதிகாரிகள் ‘உள்ளே’ போவார்கள்!

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்துள்ள அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் திமுகவில் இன்று இணைந்தனர்.

இவ்விழாவில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், "அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து முறையான விசாரணை தொடங்க உள்ளது. இந்நிலையில் காட்பாடி அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

அப்படி செய்தால் தான், இந்த ஆலை மீண்டும் நல்லமுறையில் இயங்கும். எனவே, தற்போதுள்ள அதிகாரிகள் உஷாராக பணியாற்ற வேண்டும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in