தமிழகத்தில் கரோனா பாதிப்பு, மரணம் குறைந்தது!

தமிழகத்தில் கரோனா பாதிப்பு, மரணம் குறைந்தது!

தமிழகத்தில் ஒருநாள் கரோனா பாதிப்பு 6,120 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் இன்று புதிதாக 1,23,537 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கரோனா பாதிப்பு 6,120 ஆக உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கரோனா பாதிப்பு 6,120 ஆக குறைந்துள்ளது. 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மேலும் 972 பேருக்கு கரோனா தொற்றுசென்னையில் ஏற்கெனவே 1,223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 972 ஆக குறைந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 10 பேரும் தனியார் மருத்துவமனையில் 16 பேரும் உயிரிழந்தனர். கரோனாவால் மேலும் 26 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,759 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,38,878ல் இருந்து 1,21,828 ஆக குறைந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in